Sachin










மாஸ்டர் பேட்ஸ்மேன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் இன்று 42-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
16 மாதங்களுக்கு முன்பு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்றுவிட்டார் சச்சின். ஆனால் இன்றளவிலும் அவரை பற்றிய பேச்சுகளும், செய்திகளும் ஓய்ந்தபாடில்லை. இன்றளவிலும் கிரிக்கெட்டுடனான தொடர்பில் இருந்து வருகிறார்.
ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பெற்றுவிட்ட சச்சின், கால் நூற்றாண்டு காலம் தான் விளையாடிய கிரிக்கெட்டை பற்றிய அற்புதமான நுண்ணறிவு கொண்டவர். கிரிக்கெட் தொடர்பாக அவர் தெரிவித்து வரும் கருத்துகள் இன்றளவிலும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வருகின்றன.
‘பிளேயிங் இட் மை வே’ என்ற பெயரில் வெளியான சச்சினின் சுயசரிதை கடந்த நவம்பரில் வெளியாகி ஹிட் அடித்தது. சமீபத்தில் முடிவடைந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தூதராக சச்சின் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments