திருமண பொருத்தம்




'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்', 'கணவன் அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம்' என்று சான்றோர்கள் சொல்லி வைத்துள்ளனர். ஆயிரம் காலத்துப் பயிர் எனப்படும் திருமண வாழ்வு சிறக்க முன்னோர்கள் சில வழிமுறைகளை கடைப்பிடித்தனர். பணப்பொருத்தம் பார்ப்பதை விட மனப்பொருத்தமும், மண் பொருத்தமும், மங்கல நாண் சூட நட்சத்திரப் பொருத்தமும் பார்க்க வேண்டும் என்று கண்டறிந்தனர். 'வாழ்பவனுக்கு நட்சத்திரம்' என்று கண்டறிந்தனர். 'நம்பிக்கையூட்டும் நட்சத்திரப் பொருத்தங்கள் வாயிலாக நாம் வரனைத் தேர்ந்தெடுக்கலாம். வரம் தரும் தெய்வம் 'வரன்' தரவேண்டுமானால் அதற்குரிய வழிபாடுகளையும் முன்னோர்கள் கண்டறிந்தனர்.

எனவே திருமணம் பேச முன்வரும் போது முதலில் நட்சத்திரப் பொருத்தம் நன்றாக இருக்கிறதா என்று பார்த்து ஜாதகம் வாங்குவதை முன்னிட்டு கீழ்கண்ட அட்டவணை வழங்கப்படுகிறது. அதன்பிறகு வரன்கள் ஜாதகத்தில் தசாபுத்தி சந்திப்பு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். ஏதேனும் தோஷங்கள் உள்ளதா என்று பார்க்க வேண்டும், செவ்வாய் தோஷம், சனி தோஷம், சர்ப்ப தோஷம் மற்றும் கிரக தோஷங்கள் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். அவற்றைப் பரிகாரங்கள் மூலம் நிவர்த்தி செய்ய முடியுமானால் அதைப் பின்பற்றலாம். அல்லது சுத்த ஜாதகங்களைத் தேர்ந்தெடுத்து அதிக பொருத்தம் அமைந்த வரனை பரிசீலித்து செய்தால் வாழ்க்கை வசந்தமாகும் இல்லறம் நல்லறமாகும். 

வருத்தமில்லாத வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் திருமணப் பொருத்தங்கள் மொத்தம் பத்தாகும். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணத்தை முன்னிட்டு பொருத்தத்தை குறிக்கும். இந்தப் பத்துப் பொருத்தங்கள் நீங்கலாக கிரக தோஷங்கள் இருக்கின்றனவா என்றும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். பெண்ணின் நட்சத்திரத்திலிருந்து ஆணின் நட்சத்திரத்தை எண்ணிப் பார்ப்பது வழக்கம்.

குறிப்பாக கணப் பொருத்தம் என்பது ஒருவரின் குணத்தைக் குறிக்கும். ரஜ்ஜூ என்பது மாங்கல்யப் பொருத்தம், மகேந்திரம் என்பது புத்திர பாக்கியத்திற்குரிய பொருத்தம். இவற்றைப் போல ஒவ்வொரு பொருத்தமும் ஒவ்வொன்றைக் குறிக்கும் விதத்தில் உள்ளது. இவற்றில் முக்கியப் பொருத்தங்கள் பலவும் பொருந்தியுள்ளதா என்று பார்த்து முடிவெடுப்பது நல்லது.

இந்தப் பத்துப் பொருத்தங்கள் நீங்கலாக மற்ற பொருத்தங்களையும் தம்பதியர்கள் இருவருடைய ஜாதகத்தையும் வைத்துப் பார்த்து தசாபுத்தியறிந்து பிறகு திருமணம் செய்ய முடிவு செய்தால் முத்தான வாழ்க்கை மலரும். முன்னேற்றமும் கிட்டும்.

பத்துப்பொருத்தங்கள்  எவை  எவை?

1. தினம், 2. கணம், 3. மகேந்திரம், 4. ஸ்தீரி தீர்க்கம், 5. யோனி,
6. ராசி, 7. ராசிஅதிபதி, 8. வசியம், 9. ரஜ்ஜூ, 10. வேதை

பெண்ணின் நட்சத்திரம் அஸ்வினி (மேஷ ராசி)

வ.  ஆணின் நட்சத்திரம் ராசி அமையும் பொருத்தங்கள், மொத்தப்பொருத்தம்
                                                                           
1.    அஸ்வினி (மேஷம்)    பொருத்தம் உண்டு                 
2.    பரணி (மேஷம்)   - அமையும்பொருத்தங்கள் - 1, 2, 5, 6, 7, 9, 10  மொத்தப்பொருத்தம்  -  7
3.    கார்த்திகை 1-ம் பாதம் (மேஷம்) - அமையும்பொருத்தங்கள் -  2, 5, 6, 7, 9, 10  மொத்தப்பொருத்தம் - 6
4.       கார்த்திகை 2, 3, 4-ம் பாதம் (ரிஷபம்) - அமையும்பொருத்தங்கள் - 2, 5, 7, 9, 10   மொத்தப்பொருத்தம் - 5
5.    ரோஹிணி (ரிஷபம்)  - அமையும்பொருத்தங்கள்   1, 2, 3, 5, 7, 9, 10 மொத்தப்பொருத்தம்   7
6.      மிருகசீரிஷம் 1, 2-ம் பாதம் (ரிஷபம்)  - அமையும்பொருத்தங்கள் -  2,5,7,9,10  மொத்தப்பொருத்தம்  5
7.       மிருகசீரிஷம் 3, 4-ம் பாதம் (மிதுனம்)  - அமையும்பொருத்தங்கள்  - 2,5,9,10  மொத்தப்பொருத்தம்  4
8.    திருவாதிரை (மிதுனம்) - அமையும்பொருத்தங்கள்  - 1,2,5,9,10 - மொத்தப்பொருத்தம் -  5
9.    புனர்பூசம் 1,2,3-ம் பாதம் (மிதுனம்) - அமையும்பொருத்தங்கள் - 2,3,5,9,10 - மொத்தப்பொருத்தம்  5
10.    புனர்பூசம் 4-ம் பாதம் (கடகம்) - அமையும்பொருத்தங்கள்  - 2,3,5,7,9,10 -  மொத்தப்பொருத்தம் - 6
11.    பூசம் (கடகம்)   - அமையும்பொருத்தங்கள் - 1,2,4,5,7,9,10 - மொத்தப்பொருத்தம் - 7
12.     ஆயில்யம் (கடகம்) - அமையும்பொருத்தங்கள் -   ரஜ்ஜூ தட்டும்    - மொத்தப்பொருத்தம் -
13.     மகம் (சிம்மம்) - அமையும்பொருத்தங்கள் - ரஜ்ஜூ தட்டும் -    மொத்தப்பொருத்தம்- 
14.     பூரம் (சிம்மம்) - அமையும்பொருத்தங்கள்  -   1,2,4,5,7,8,9,10 -  மொத்தப்பொருத்தம் - 8
15.    உத்திரம் 1-ம் பாதம் சிம்மம் - அமையும்பொருத்தங்கள்  - 2,4,5,7,8,9,10 - மொத்தப்பொருத்தம் -  8
16.    உத்திரம் 2,3,4-ம் பாதம் (கன்னி)  - அமையும்பொருத்தங்கள் -  2,4,5,9,10  மொத்தப்பொருத்தம் - 5
17.  ஹஸ்தம் (கன்னி)  - அமையும்பொருத்தங்கள் -  1,2,3,4,9,10 -   மொத்தப்பொருத்தம் - 6
18.    சித்திரை 1,2-ம் பாதம் (கன்னி)  - அமையும்பொருத்தங்கள் -  2,4,5,9,10 மொத்தப்பொருத்தம்  - 5
19.    சித்திரை 3,4-ம் பாதம் (துலாம்)  - அமையும்பொருத்தங்கள் -  2,4,5,6,7,9,10  மொத்தப்பொருத்தம் -  7
20.     சுவாதி (துலாம்) - அமையும்பொருத்தங்கள்  -  1,2,4,6,7,9,10 -  மொத்தப்பொருத்தம் - 7
21.    விசாகம் 1,2,3-ம் பாதம் (துலாம்)  - அமையும்பொருத்தங்கள்  - 2,3,4,5,6,7,9,10 -  மொத்தப்பொருத்தம் - 8
22.    விசாகம் 4-ம் பாதம் (விருச்சிகம்)   - அமையும்பொருத்தங்கள் - 2,3,4,5,7,8,9,10    மொத்தப்பொருத்தம் - 8
23.    அனுஷம் (விருச்சிகம்)  - அமையும்பொருத்தங்கள்  - 1,2,4,5,7,8,9,10 - மொத்தப்பொருத்தம் - 8
24.    கேட்டை (விருச்சிகம்)  - அமையும்பொருத்தங்கள்  - ரஜ்ஜூ தட்டும் -   மொத்தப்பொருத்தம் - 
25.    மூலம் (தனுசு)- அமையும்பொருத்தங்கள் - ரஜ்ஜூ தட்டும்  - மொத்தப்பொருத்தம் - 
26.   பூராடம் (தனுசு)    - அமையும்பொருத்தங்கள் - 1,2,4,5,6,7,9,10   மொத்தப்பொருத்தம்  - 8
27.    உத்ராடம் 1-ம் பாதம் (தனுசு) -  அமையும்பொருத்தங்கள் - 2,4,5,6,7,9,10  மொத்தப்பொருத்தம் - 7
28.    உத்ராடம் 2,3,4-ம் பாதம் (மகரம்)  - அமையும்பொருத்தங்கள் -  2,4,5,6,7,9,10   மொத்தப்பொருத்தம் - 7
29.    திருவோணம் (மகரம்) -  அமையும்பொருத்தங்கள் - 1,2,3,4,5,6,7,9,10 மொத்தப்பொருத்தம்  -  9
30.  அவிட்டம் 1,2-ம் பாதம் (மகரம்) - அமையும்பொருத்தங்கள்  -  2,4,5,6,7,9,10  மொத்தப்பொருத்தம் - 7
31.    அவிட்டம் 3,4-ம் பாதம் (கும்பம்) - அமையும்பொருத்தங்கள் - 2,4,5,6,7,9,10 மொத்தப்பொருத்தம்  - 7
32.    சதயம் (கும்பம்)  - அமையும்பொருத்தங்கள் 1,2,4,5,6,7,9,10 மொத்தப்பொருத்தம்  - 8
33.    பூரட்டாதி 1, 2, 3-ம் பாதம் (கும்பம்) -  2,3,4,5,6,7,9,10 - மொத்தப்பொருத்தம் - 8
34.    பூரட்டாதி 4-ம் பாதம் (மீனம்)  -அமையும்பொருத்தங்கள் -  2,3,4,5,6,7,9,10 மொத்தப்பொருத்தம்  - 8
35.    உத்திரட்டாதி (மீனம்) - அமையும்பொருத்தங்கள்  - 1,2,4,5,6,7,9,10 மொத்தப்பொருத்தம் -  8
36.    ரேவதி (மீனம்)  அமையும்பொருத்தங்கள்   ரஜ்ஜூ தட்டும்.    - மொத்தப்பொருத்தம் -

Comments