Kanchana




 கொஞ்சம் திகில், கொஞ் சம் காமெடி கலந்து பேய்கள் ஆட முயற்சி செய்திருக்கும் அதிரடி ஆட்டம்தான் ‘காஞ்சனா 2’.
வழக்கம்போல, பேய் என்றால் பயம் தொற்றிக்கொள்ளும் பேர் வழி ராகவா லாரன்ஸ் (ராகவா). இவர் கிரீன் டிவி சேனலில் கேமராமேனாக வேலை பார்க் கிறார். நாயகி தாப்ஸி (நந்தினி) அதே சேனலில் நிகழ்ச்சி இயக்குநர். முதல் இடத்தில் இருந்த இந்த சேனல் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்படுகிறது. காரணம், போட்டி சேனலில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி. கடவுளை மையமாகக் கொண்ட அந்த நிகழ்ச்சியின் வெற்றியை முறியடிக்க பேயைப் பின்னணி யாகக் கொண்ட ஒரு நிகழ்ச்சியை வழங்கும் யோசனை உருவா கிறது. தாப்ஸி, ராகவா உள் ளிட்ட குழு மாமல்லபுரத்தில் உள்ள பாழடைந்த பங்களாவை நோக்கிப் புறப்படுகிறது. அங்கு பேய் நிகழ்ச்சியைப் படமாக் கும்போது நடக்கும் திகில் சம்பவங்களை ஒட்டி நகர்வது தான் படத்தின் மீதிக் கதை.
பேய் என்றால் எந்த அளவுக்கு லாரன்ஸுக்குப் பயம் என்பதை கோவை சரளா விவரிக்கும் காட்சிகள் கலகலப்பான தொடக் கம். படப்பிடிப்பு பங்களாவில் வெளிப்படும் மர்மங்கள், கடற் கரை மணலில் கண்டெடுக்கப் படும் தாலி, படப்பிடிப்புக் குழு வினரைப் பீதிக்குள்ளாக் கும் சம்பவங்கள் என்று தொடரும் காட்சிகள் படத்தை விறுவிறுவென நகர்த்திச் செல் கின்றன.
மர்மங்களுக்கான காரணத் தைச் சொல்லவேண்டும் என்ற அவசியம் இரண்டாம் பாதியில் ஏற்படும்போது, ஓட்டத்தின் வேகம் குறைகிறது. பேய்களின் நோக்கத்தைச் சொல்வதற்கு முன்பு, பேய்களின் ஆட்டத்தைக் காட்ட அதிகமான காட்சிகளை எடுத்துக்கொள்கிறார் இயக்கு நர். இந்தக் காட்சிகளில் புதுமையை விடவும் இரைச்சலே அதிகம். இதையெல்லாம் தாண்டிப் பின்னணிக் கதையைச் சொல்லி பழிவாங்கும் படலத்தைக் காட்டி முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது.
பின்பாதி கதை சற்றும் கவர வில்லை என்பது ஒருபுறம் இருக்க, பேயின் தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள், சண்டைகள் ஆகியவையும் பழைய சரக்கு களாகவே உள்ளன. ஒரே மாதிரி காட்சிகள் திரும்பத் திரும்ப வருவது அலுப்பூட்டுகிறது.
ஒவ்வொரு திகில் காட்சியிலும் மறக்காமல் நகைச்சுவையைக் கலந்திருப்பது இயக்குநரின் சாமர்த்தியம். பேய்களின் ஆட்டத் துக்கு மத்தியில் முன்பாதியிலும் பின்பாதியிலும் வரும் காதல் காட்சிகளும் மாறுபட்ட உணர் வைக் கொடுக்கின்றன. ஆனால், இந்த மென்மையெல் லாம் இரைச்சலின் உக்கிரத் தில் அடித்துச் செல்லப்படு கின்றன.
முந்தைய காஞ்சனாவில் திருநங்கைகளின் நிலையை அழுத்தமாகப் பதிவுசெய்த லாரன்ஸ், இந்தப் படத்தில் மாற்றுத்திறனாளிகள் பற்றிப் பேசுகிறார். திருநங்கைகள் பற்றிய பொது மக்களின் பார்வையையே மாற்றக்கூடிய அளவுக்கு அந்த காஞ்சனா வில் அந்த உணர்வு அழுத்த மாகச் சொல்லப்பட்டிருந்தது. அந்த வலு இந்தப் படத்தில் இல்லை.
நடிப்பைப் பொறுத்தவரை ராகவா லாரன்ஸ் செய்வதற்கு புதிதாக எதுவும் இல்லை. முன் பாதியில் காஞ்சனாவில் பார்த்த அதே நடிப்பு. பின் பாதியில் வரும் மொட்டை சிவா, வழக்கமான மசாலா பட நாயகனின் பாத்திரம்தான்.
இதுவரை அழகுப் பதுமை யாக மட்டுமே வந்துபோன தாப்ஸிக்கு இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு. அழகு தேவதை யாகக் கவரும் தாப்ஸி, பேயைக் கண்டு மிரள்வதிலும் பேயாக மிரட்டுவதிலும் பிரகாசிக்கிறார். மாற்றுத்திறன் பெண்ணாக வரும் நித்யா மேனன் அனுதாபத்தை அள்ளுகிறார். கோபத்தில் சீறும்போது அசரவைக்கிறார்.
கோவை சரளா, லாரன்ஸ் சந்திக்கும் இடங்கள் சிரிக்க வைத்தாலும் காஞ்சனா முதல் பாகத்தை நினைவுபடுத்து கின்றன. மனோபாலா, மன், பூஜா உள்ளிட்டவர் களின் காமெடியும், நடிப்பும் படத்தை நகர்த்திச் செல்ல உதவுகின்றன.
எஸ்.எஸ்.தமன், லியோன் ஜேம்ஸ், சி.சத்யா, அஸ்வமித்ரா ஆகிய நால்வர் இசை! பாடல்களில் வித்தியாசம் காட்டியிருந்தாலும் படத்தில் அதை முழுவதுமாக உணர முடியவில்லை. பின்னணி இசையில் பல இடங்களில் சத்தமே பிரதான இடம் வகிக் கிறது.
ஒளிப்பதிவு ராஜவேல் ஒளி வீரன். பேருக்கு ஏற்றாற்போல திறம்பட வேலை பார்த்திருக் கிறார். சமீபத்தில் மறைந்த கிஷோரின் எடிட்டிங் படத்தின் விறுவிறுப்பைக் கூட்டுகிறது. கிராபிக்ஸ் காட்சிகளில் உழைப்பு தெரிகிறது.
படத்தின் முதல் பாதி ஈர்ப்பை, இரண்டாம் பாதி யும் தக்கவைத்திருந்தால் ‘காஞ்சனா 2’வைப் பயந்து ரசித்திருக்கலாம்.

Comments