LEEK FOODBALL
மேட்ரிட், ஆட்டத்தின் இறுதி நேரத்தில் இரண்டு நிமிடங்களுக்கு முன்னதாக கோல் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றுள்ளார் ரியல் மேட்ரிட் அணியின் வீரர் ஜேவியர் ஹெர்னான்டெஸ். நடப்பு சீசனில் இதற்கு முன்னதாக 7 முறை அட்லெட்டிகோவுடன் ரியல் மாட்ரிட் மோதியுள்ளது. ஆனால், எந்த போட்டியிலும் அந்த அணியை வீழ்த்த முடியவில்லை. இந்நிலையில், சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் 14 நிமிடங்களில் ஆட்டத்தை முடிக்க வேண்டிய கட்டாயம் இருந்த சூழ்நிலையில், எதிரணி வீரர் ஆர்டா டூரானுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதை சாகமாக பயன்படுத்திக் கொண்ட ஜேவியர் பந்தை லாவகமாக வெற்று வலைக்குள் ரொனால்டோவை தாண்டி செல்லும் அளவுக்கு கோலாக மாற்றினார். அந்த ஒரு கோல் ஆட்டத்தையே மாற்றி (1-0) அரையிறுதிக்குள் ரியல் மாட்ரிட் அணியை தகுதி பெறச் செய்துள்ளது.