Posts

Showing posts with the label ஜோக்கர் - விமர்சனம்

ஜோக்கர் - விமர்சனம்

Image
அதிகார மையங்களை எளிய மனிதனால் எப்படி தட்டிக் கேட்க முடியும்? அதனால் தன்னையே ஜனாதிபதியாக கருதிக் கொள்ளும் மனநிலை படைத்தவராக மாறுகிறார். ஜோக்கராக பாவித்துக் கொண்டு மன்னர் மன்னன் எழுப்பும் கேள்விகள், ஒவ்வொன்றும் சம்மட்டி அடிகள்.  அரசியல்வாதிகளின் ஆர்ப்பாட்டம், அதிகாரிகளின் ெமத்தனம், மணல் கொள்ளை, கால் ஒடிந்த ஆட்டுக்கு நஷ்ட ஈடு, ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த குழந்தைக்கு நீதி கேட்பது என பல பிரச்னைகளை தொட்டுச் செல்கிறது படம். மன்னர் மன்னன் வைக்கும் கோரிக்கைகளும், கேள்விகளும் பதில் சொல்ல முடியாதவையாக இருக்கிறது. தன் மனைவியை கருணை கொலை செய்ய அனுமதி கோரும் மனுவை நிராகரித்த நீதிமன்றத்தின் முன், ‘கழிப்பறை கட்டித்தர வக்கில்லாத அரசிடம் கருணையை எதிர்பார்த்தது என் தவறுதான்’ என்று அவர் முழங்குவது உலுக்கி எடுக்கிறது.  மன்னர் மன்னனாக குரு சோம சுந்தரம் வாழ்ந்திருக்கிறார். ஒரு எளிய மனிதனின் காதலை நுணுக்கமாக வெளிப்படுத்துவது, தன்னை ஜனாதிபதியாக கருதிக்கொண்டு மிடுக்காக நடப்பது, அதிகாரத் தோரணையில் ஆணையிடுவது என இதுவரை இல்லாத புதிய கதாபாத்திரத்திற்கு தன் நடிப்பால் உயிர் கொடுத்திருக்கிறார்.  மன்னர் மன்னனின