திருமண பொருத்தம்
'ம னைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்', 'கணவன் அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம்' என்று சான்றோர்கள் சொல்லி வைத்துள்ளனர். ஆயிரம் காலத்துப் பயிர் எனப்படும் திருமண வாழ்வு சிறக்க முன்னோர்கள் சில வழிமுறைகளை கடைப்பிடித்தனர். பணப்பொருத்தம் பார்ப்பதை விட மனப்பொருத்தமும், மண் பொருத்தமும், மங்கல நாண் சூட நட்சத்திரப் பொருத்தமும் பார்க்க வேண்டும் என்று கண்டறிந்தனர். 'வாழ்பவனுக்கு நட்சத்திரம்' என்று கண்டறிந்தனர். 'நம்பிக்கையூட்டும் நட்சத்திரப் பொருத்தங்கள் வாயிலாக நாம் வரனைத் தேர்ந்தெடுக்கலாம். வரம் தரும் தெய்வம் 'வரன்' தரவேண்டுமானால் அதற்குரிய வழிபாடுகளையும் முன்னோர்கள் கண்டறிந்தனர். எனவே திருமணம் பேச முன்வரும் போது முதலில் நட்சத்திரப் பொருத்தம் நன்றாக இருக்கிறதா என்று பார்த்து ஜாதகம் வாங்குவதை முன்னிட்டு கீழ்கண்ட அட்டவணை வழங்கப்படுகிறது. அதன்பிறகு வரன்கள் ஜாதகத்தில் தசாபுத்தி சந்திப்பு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். ஏதேனும் தோஷங்கள் உள்ளதா என்று பார்க்க வேண்டும், செவ்வாய் தோஷம், சனி தோஷம், சர்ப்ப தோஷம் மற்றும் கிரக தோஷங்கள் இருக்கிறதா என்பதைப் பார்க்க வ