கபாலிடா, வெறும் ரூ.1.986 தான்டா: ரஜினியால் கல்லா கட்டிய சிங்கப்பூர் நிறுவனம்
Kabali சிங்கப்பூர்: சிங்கப்பூரை சேர்ந்த புதிய நிறுவனம் ஒன்று கபாலி பொம்மை விற்று நல்ல பணம் பார்த்துள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த இந்திய வம்சாவளியினர் 5 பேர் சேர்ந்து துவங்கிய நிறுவனம் கார்பன் காப்பி கலெக்டிபிளிஸ். இந்த நிறுவனத்துடன் கபாலி பட விளம்பரத்திற்காக கை கோர்த்தார் தயாரிப்பாளர் தாணு. அதன்படி அந்நிறுவனம் கபாலி படத்தில் வரும் கபாலீஸ்வரன் கதபாத்திரம் அதாங்க ரஜினியின் உருவ பொம்மைகளை செய்து விற்பனை செய்தது. அந்நிறுவனம் 40 ஆயிரம் பொம்மைகளை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் 85 சதவீத பொம்மைகள் விற்றுவிட்டன. 16.5 செ.மீ. உயரமுள்ள கபாலி பொம்மையின் எடை 300 கிராம். அதன் விலை ரூ. 1,986 ஆகும். கபாலி படம் மட்டும் கல்லாகட்டவில்லை. கபாலி பொம்மையை விற்று இந்த நிறுவனமும் கல்லாகட்டியுள்ளது. கபாலி பொம்மை விற்பனை ஜூன் மாதம் இரண்டாம் வாரம் துவங்கியது. கபாலி பொம்மையை இந்தியாவில் அமேசான் நிறுவனம் விற்பனை செய்தது. மலேசியாவில் மதுரா ஸ்டோர்ஸ் கபாலி பொம்மை விற்பனையை கவனித்தது. அந்த நிறுவனம் முதன்முதலாக பாட்ஷா படத்தில் வரும் மாணிக் பாட்ஷாவின் கதாபாத்திர பொம்மையை செய்து விற்பனை செய்தது என்பது