குளிர்காலத்தில் ஏன் நோய்கள் தாக்குகின்றன?
உடலின் செயல் கடிகாரம் என்பது உடலின் செல்களில் தொடங்கி, பாகங்கள் வரை ஒரு சுழற்சியில் காலம் தவறாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கும். நமது சுவற்றில் தொங்கவிட்டிருக்கும் கடிகாரம் போலவே. எப்போது கிருமிகள் நமது செல்களை தாக்குகின்றதோ, அப்போது இந்த சுழற்சியில் பாதிப்பு ஏற்படும். விளைவு உடல் நலம் சரியில்லாமல் போகும். கிருமிகள் எந்த சமயத்தில் மிக அதிகமாக பெருகும் என கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வை நடத்தினர். இதில் ஒரு நாளின் இறுதியை விட , காலையில்தான் கிருமிகள் பல மடங்கு வேகமாக பெருகும் என ஆய்வின் இறுதியில் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்விற்காக சோதனை எலிகளிடம் பரிசோதனை செய்தார்கள். எலிகளுக்கு ஹெர்ப்ஸ் வைரஸ் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் கிருமிகளை உடலுக்குள் செலுத்தினர். பின்னர் அவைகளை கண்காணித்த போது. காலையில் இந்த வைரஸ் கிருமிகள் அதிக அளவில் பெருகியிருப்பது தெரியவந்துள்ளது. மாலை மற்றும் இரவுகளில் அவை பெருகவில்லை.ஆனால் நோயின் தீவிரத்தை பரவும் active phase நிலையில் இருந்திருக்கின்றன். மறு நாள் காலையில் இன்னும் பல மடங்கு அதிகம் பெருகுகின்றன. இரவுகளில் நைட் ஷி