Posts
Showing posts with the label Cricket
Modi
- Get link
- X
- Other Apps
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி அரையிறுதியில் தோல்வியுற்றதை ரசிகர்கள் விமர்சித்த விதம் தன்னை வருத்தத்தில் ஆழ்த்தியதாக பிரதமர் மோடி கூறினார். அகில இந்திய வானோலியில் ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பான பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி நிகழ்த்திய உரையில் இது குறித்து அவர் பேசியது: "ஒரு மகிழ்ச்சி தரும் செய்தியையும், வருத்தமளிக்கும் வேறு ஒரு தகவலையும் நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்தியாவின் இரண்டு பெண்கள் நாட்டுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள் என்பது எனக்கு பெருமிதம் அளிக்கிறது. ஒரு பெண் சைனா நெஹ்வால் பாட்மிண்டன் விளையாட்டில் உலகிலேயே முதலிடம் பெற்றார், இரண்டாவது பெண், சானியா மிர்ஸா டென்னிஸ் இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் நிலையை அடைந்தார். இருவருக்கும் வாழ்த்துக்கள். நாட்டின் அனைத்து பெண்களுக்கும் வாழ்த்துக்கள். நம்மவர்களின் சாகசத்தையும் சாதனையையும் நினைக்கும் போது பெருமிதம் பொங்குகிறது. ஆனால் சில வேளைகளில் நாமுமே கூட கோபத்துக்கு உள்ளாக நேரிடுகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட்டின் அரையிறுதி ஆட்டத்தில் நாம் ஆஸ்திரேலியாவிடம் தோற்க்க நேர்ந்தது. சி
C S K
- Get link
- X
- Other Apps
சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் ஆட்டத்தில், சென்னை அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் 5 வெற்றிகளுடன் ஐபிஎல் புள்ளி பட்டியலில் சென்னை முதலிடத்தைப் பெற்றுள்ளது. பஞ்சாப் அணி 4 தோல்விகளோடு பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. சென்னை நிர்ணயித்த 193 ரன்களை விரட்டிய பஞ்சாப் அணி முதல் ஓவரிலேயே சேவாக் விக்கெட்டை இழந்தது. மற்றொரு துவக்க வீரர் முரளி விஜய் சிறிது நம்பிக்கயளித்தாலும், அடுத்தடுத்து, மார்ஷ், பெய்லி, மில்லர் என ஆட்டமிழக்க 9 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 55 ரன்களை மட்டுமே பஞ்சாப் சேர்த்தது. சிறப்பாக ஆடிவந்த விஜய் 10-வது ஓவரில் 34 ரன்களுக்கு ஆட்டமிழக்க ஆட்டம் மொத்தமாக சென்னையின் பிடிக்கு வந்தது. தொடர்ந்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 95 ரன்களை மட்டுமே எடுத்து 9 விக்கெட்டுகளை இழந்தது. ரவீந்த்ர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், அஸ்வின் மற்றும் நேரா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். முன்னதாக டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. வழக்கம்
Sachin
- Get link
- X
- Other Apps
மாஸ்டர் பேட்ஸ்மேன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் இன்று 42-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். 16 மாதங்களுக்கு முன்பு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்றுவிட்டார் சச்சின். ஆனால் இன்றளவிலும் அவரை பற்றிய பேச்சுகளும், செய்திகளும் ஓய்ந்தபாடில்லை. இன்றளவிலும் கிரிக்கெட்டுடனான தொடர்பில் இருந்து வருகிறார். ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பெற்றுவிட்ட சச்சின், கால் நூற்றாண்டு காலம் தான் விளையாடிய கிரிக்கெட்டை பற்றிய அற்புதமான நுண்ணறிவு கொண்டவர். கிரிக்கெட் தொடர்பாக அவர் தெரிவித்து வரும் கருத்துகள் இன்றளவிலும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வருகின்றன. ‘பிளேயிங் இட் மை வே’ என்ற பெயரில் வெளியான சச்சினின் சுயசரிதை கடந்த நவம்பரில் வெளியாகி ஹிட் அடித்தது. சமீபத்தில் முடிவடைந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தூதராக சச்சின் இருந்தது குறிப்பிடத்தக்கது.
VIRAT KOLHI
- Get link
- X
- Other Apps
பெங்களூரு, ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியில் பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த 20-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது. இதில் 182 ரன் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணியால் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்களே எடுக்க முடிந்தது. 62 ரன்கள் குவித்த சென்னை வீரர் சுரேஷ்ரெய்னா ஆட்டநாயகன் விருது பெற்றார். 5-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். பெங்களூரு அணி தொடர்ச்சியாக சந்தித்த 3-வது தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது. தோல்விக்கு பின்னர் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில், ‘தோல்வி எங்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. உண்மையை சொல்லப்போனால் நாங்கள் ஒரு அணியாக ஒருங்கிணைந்து செயல்படுவதில் தவறி விட்டோம். இந்த குறையை போக்க நாங்கள் கலந்து ஆலோசிக்க வேண்டியது அவசியமாகும். இந்த பிரச்சினையை சரி செய்ய முடியும் என்று நம்புகிறோம். தனிப்பட்ட வீரரின் சிறப்பான ஆட்டத்தை விட நல்ல இணை (பார்ட்னர்ஷிப்) ஆட்டம் அமைய வேண்டியது முக்கியமானதாகும். அது தான்