Posts

Showing posts from 2015

Krish

Image

Shreya ghoshal

Image

A P J

Image
     style="display:block"      data-ad-client="ca-pub-5902434669745612"      data-ad-slot="4660417288"      data-ad-format="auto">

Virender Sehwag

Image

Bagugali

Image
மே 31ம் தேதி நடைபெற இருந்த 'பாஹூபலி' படத்தின் இசை வெளியீட்டு விழா ஒத்திவைக்கப்பட்டதற்கு இயக்குநர் ராஜமெளலி விளக்கம் அளித்துள்ளார். இயக்குநர் ராஜமெளலியின் அடுத்த திரைப்படம் 'பாஹூபலி (தமிழில் மகாபலி)'. வரலாற்றுப் படமாக உருவாகி வரும் 'பாஹூபலி'யில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மே 31ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களுக்காக தற்போது அந்த விழா ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. 'பாஹூபலி' இசை வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டது ஏன் என இயக்குநர் ராஜமெளலி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்திருக்கிறார்கள். அதில் அவர் கூறியிருப்பது: "நீங்கள் அனைவரும் அறிந்தது போல், இம்மாதம் 31-ம் தேதி படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோவை வெளியிடுவதே முதற்கட்ட திட்டமாக இருந்தது. மேலும் செய்தியாளர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்து படத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றி அனைவருக்கும் தெரிவிக்கவே முதலில் ஏற்பாடு செய்திருந்தோம்.துர

Modi

Image
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி அரையிறுதியில் தோல்வியுற்றதை ரசிகர்கள் விமர்சித்த விதம் தன்னை வருத்தத்தில் ஆழ்த்தியதாக பிரதமர் மோடி கூறினார். அகில இந்திய வானோலியில் ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பான பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி நிகழ்த்திய உரையில் இது குறித்து அவர் பேசியது: "ஒரு மகிழ்ச்சி தரும் செய்தியையும், வருத்தமளிக்கும் வேறு ஒரு தகவலையும் நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்தியாவின் இரண்டு பெண்கள் நாட்டுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள் என்பது எனக்கு பெருமிதம் அளிக்கிறது. ஒரு பெண் சைனா நெஹ்வால் பாட்மிண்டன் விளையாட்டில் உலகிலேயே முதலிடம் பெற்றார், இரண்டாவது பெண், சானியா மிர்ஸா டென்னிஸ் இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் நிலையை அடைந்தார். இருவருக்கும் வாழ்த்துக்கள். நாட்டின் அனைத்து பெண்களுக்கும் வாழ்த்துக்கள். நம்மவர்களின் சாகசத்தையும் சாதனையையும் நினைக்கும் போது பெருமிதம் பொங்குகிறது. ஆனால் சில வேளைகளில் நாமுமே கூட கோபத்துக்கு உள்ளாக நேரிடுகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட்டின் அரையிறுதி ஆட்டத்தில் நாம் ஆஸ்திரேலியாவிடம் தோற்க்க நேர்ந்தது. சி

Kanchana

Image
  கொஞ்சம் திகில், கொஞ் சம் காமெடி கலந்து பேய்கள் ஆட முயற்சி செய்திருக்கும் அதிரடி ஆட்டம்தான் ‘காஞ்சனா 2’. வழக்கம்போல, பேய் என்றால் பயம் தொற்றிக்கொள்ளும் பேர் வழி ராகவா லாரன்ஸ் (ராகவா). இவர் கிரீன் டிவி சேனலில் கேமராமேனாக வேலை பார்க் கிறார். நாயகி தாப்ஸி (நந்தினி) அதே சேனலில் நிகழ்ச்சி இயக்குநர். முதல் இடத்தில் இருந்த இந்த சேனல் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்படுகிறது. காரணம், போட்டி சேனலில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி. கடவுளை மையமாகக் கொண்ட அந்த நிகழ்ச்சியின் வெற்றியை முறியடிக்க பேயைப் பின்னணி யாகக் கொண்ட ஒரு நிகழ்ச்சியை வழங்கும் யோசனை உருவா கிறது. தாப்ஸி, ராகவா உள் ளிட்ட குழு மாமல்லபுரத்தில் உள்ள பாழடைந்த பங்களாவை நோக்கிப் புறப்படுகிறது. அங்கு பேய் நிகழ்ச்சியைப் படமாக் கும்போது நடக்கும் திகில் சம்பவங்களை ஒட்டி நகர்வது தான் படத்தின் மீதிக் கதை. பேய் என்றால் எந்த அளவுக்கு லாரன்ஸுக்குப் பயம் என்பதை கோவை சரளா விவரிக்கும் காட்சிகள் கலகலப்பான தொடக் கம். படப்பிடிப்பு பங்களாவில் வெளிப்படும் மர்மங்கள், கடற் கரை மணலில் கண்டெடுக்கப் படும் தாலி, படப்பிடிப்புக் குழு வினரைப் பீதிக்குள்ளாக்

T Rajendrar

Image
தனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் ‘ரோமியோ ஜூலியட்’ படப் பாடலுக்கு தடை விதிப்பதுடன், ரூ.1 கோடி இழப்பீடு பெற்றுத் தரக்கோரி டி.ராஜேந்தர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ் திரையுலகில் நான் நடித்துள்ள பல படங்கள் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளன. இதனால் மக்கள் மத்தியில் எனக்கு நற்பெயர் உள்ளது. இந்நிலையில்,ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்துள்ள ‘ரோமியோ ஜூலியட்’ என்ற திரைப்படத்தை நந்தகோபால் என்பவர் தயாரித்துள்ளார். இந்த படத்தில், ‘டண்டனக்கா நக்கா நக்கா...’ என்ற பாடலை ரோகேஷ் என்பவர் எழுதியுள் ளார். டி.இமான் இசையமைத்த அந்த பாடலை அனிருத் பாடி யுள்ளார். இப்பாடலுக்கு இடையே என்னுடைய பேச்சுக் கள், என்னுடைய உச்சரிப்புக் கள் இடம் பெற்றுள்ளன. இவற்றை பயன்படுத்துவது தொடர்பாக என்னிடம் எந்த அனுமதியையும் அவர்கள் பெறவில்லை. இந்த பாடல் குறித்து நடிகர் ஜெயம்ரவி பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், தான் டி.ராஜேந்தரின் ரசிகனாக படத்தில் நடித

kankaroo

Image
சர்ச்சைகளுக்குப் பேர்போன இயக்குநர் சாமி இந்த முறை அண்ணன் - தங்கை பாசத்தைக் கையாண்டிருக்கிறார். அண்ணன் - தங்கை பாசத்தைப் பல கோணங்களில் அணுகிய தமிழ் சினிமாவில் ‘கங்காரு’ வின் பாசம் எப்படி எனப் பார்க்கலாம். ஒரு வயதுத் தங்கையை மார்போடு அணைத்துக்கொண்டு அந்த மலையூருக்கு வந்து சேர்கிறான் பத்து வயது முருகேசன். அம்மா, அப்பாவை இழந்து நிராதரவாக நிற்கும் அவனுக்கு ஒரே பிடிமானம் தங்கை அழகு (ஸ்ரீ பிரியங்கா). இவனுக்கு அடைக்கலம் கொடுக்கும் அந்த ஊரின் சிறு வணிகர் கருப்பசாமி (தம்பி ரமைய்யா), தங்கையை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கும் பாசத்தைப் பார்த்து அவனை ‘கங்காரு’ என அழைக்க ஆரம்பிக்கிறார். ஊரும் அதையே பிடித்துக் கொள்கிறது. அண்ணனும் தங்கையும் வளர்ந்து ஆளாகிறார்கள். தங்கை ஒருவனைக் காதலிக்கிறாள். அவனை மணம் முடிக்க நினைக்கும் போது அவன் மர்மமாக இறந்துபோகிறான்.ஒரு இடைவெளிக்குப் பிறகு மற்றொரு மாப்பிள்ளையைப் பேசி முடிக்கிறார்கள். அவனுக்கும் அகால மரணம் சம்பவிக்கிறது. அதற்கு மேலும் அந்த ஊரில் அவர்கள் வசிப்பது நல்லதல்ல என எண்ணும் விஸ்வநாதன் (ஆர். சுந்தரராஜன்) பக்கத்திலிருக்கும் தனது ஊருக்கு அண்ணன்

Jondy Rose

Image
தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரரும் உலகின் சிறந்த பீல்டருமான ஜான்ட்டி ரோட்ஸ்-மெலானி தம்பதியருக்கு பிறந்த பெண் குழந்தைக்கு இந்தியா ஜான் ரோட்ஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் பீல்டிங் பயிற்சியாளராக இருந்து வரும் ஜாண்டி ரோட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலானிக்கு வியாழக்கிழமை பெண் குழந்தை பிறந்தது. இந்தப் பெண் குழந்தைக்கு இந்தியா ஜான் ரோட்ஸ் என்று பெயர் சூட்டியுள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் வசதிகள் குறைவு என்ற காரணத்தினால் மும்பை மருத்துவமனையில் மனைவியை அனுமதித்திருந்தார் ரோட்ஸ். இந்நிலையில் வியாழக்கிழமை பெண் குழந்தை பிறந்தது. குழந்தை 3.7 கிலோ எடை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

C S K

Image
சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் ஆட்டத்தில், சென்னை அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் 5 வெற்றிகளுடன் ஐபிஎல் புள்ளி பட்டியலில் சென்னை முதலிடத்தைப் பெற்றுள்ளது. பஞ்சாப் அணி 4 தோல்விகளோடு பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. சென்னை நிர்ணயித்த 193 ரன்களை விரட்டிய பஞ்சாப் அணி முதல் ஓவரிலேயே சேவாக் விக்கெட்டை இழந்தது. மற்றொரு துவக்க வீரர் முரளி விஜய் சிறிது நம்பிக்கயளித்தாலும், அடுத்தடுத்து, மார்ஷ், பெய்லி, மில்லர் என ஆட்டமிழக்க 9 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 55 ரன்களை மட்டுமே பஞ்சாப் சேர்த்தது. சிறப்பாக ஆடிவந்த விஜய் 10-வது ஓவரில் 34 ரன்களுக்கு ஆட்டமிழக்க ஆட்டம் மொத்தமாக சென்னையின் பிடிக்கு வந்தது. தொடர்ந்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 95 ரன்களை மட்டுமே எடுத்து 9 விக்கெட்டுகளை இழந்தது. ரவீந்த்ர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், அஸ்வின் மற்றும் நேரா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். முன்னதாக டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. வழக்கம்

Rajini iswariya

Image
அப்பா சூப்பர் ஸ்டார், கணவர் நாடறிந்த நடிகர். ஆனால் பேச்சில் பந்தா காட்டுவதில்லை ஐஸ்வர்யா தனுஷ். ‘வை ராஜா வை’ படத்தை இயக்கி முடித்திருக்கும் நிலையில் நம்மிடம் பேசியதிலிருந்து... இம்முறை கெளதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் ஆகியோருடன் இணைந்திருக்கிறீர்களே... ‘3’ படம் மாதிரியே ‘வை ராஜா வை’ எடுத்திருப்பேன் என்று எதிர்பார்த்தீர்கள் என்றால் ஏமாற்றமே மிஞ்சும். முழுக்கக் காதலைச் சுற்றியே ‘3’ இருந்தது. ‘வை ராஜா வை’ முழுக்க ஒரு கமர்ஷியல் படம். இப்படம் பார்க்க வரும்போது ‘3’ படத்தை நினைப்பில் இருந்து எடுத்துவிட்டு வாருங்கள். நான் எழுதியிருக்கும் கதைக்கு யார் பொருத்தமாக இருப்பார்களோ, அவர்களை வைத்துப் படம் பண்ணுவதுதான் எனக்குப் பிடிக்கும். அந்த வகையில் இப்படத்துக்குக் கெளதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் பொருத்தமாக இருந்தார்கள். பிறந்த வீடு புகுந்த வீடு என எல்லோரும் சினிமா பின்னணி கொண்டவர்கள். படம் இயக்கும் முன் ஆலோசனை கேட்பீர்களா? குடும்பத்தில் இருக்கும் அனைவருமே திரையுலகைச் சார்ந்தவர்கள் என்பதால் தான் என்னுடைய வேலை எளிமையாக இருக்கிறது. ஒரு கதை எழுதினேன் என்றால் குடும்பத்தில் இர

Jilla

Image
நடிகர்கள் விஜய் மற்றும் மோகன்லால் நடிப்பில் தமிழில் வெளியான 'ஜில்லா' திரைப்படம், தெலுங்கில், நடிகர்கள் வெங்கடேஷ் மற்றும் ரவிதேஜா நடிப்பில் தயாராகவுள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக 'ஜில்லா'வின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க வேறொரு முன்னணி நடிகருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், கதையின் மீது திருப்தி இல்லாததால் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. எனவே தற்போது வெங்கடேஷ் மற்றும் ரவி தேஜா ஆகியோர் இக்கதைக்கு ஒப்புக்கொண்டள்ளதால் ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இப்படத்தை இயக்குநர் வீரூ போட்லா இயக்கவுள்ளார். 'ஜில்லா' படத்தின் ரீமேக் உரிமையை நடிகர் பவன் கல்யாணின் நெருங்கிய நண்பர் சரத் மாரார் வைத்துள்ளார். பவன் கல்யாண் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கோபாலா கோபாலா' திரைப்படம் இவர் தயாரித்ததே. கோபாலா கோபாலா' படம் இந்தியில் வெளியான 'ஓ மை காட்' படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

yamaha

Image
இரு சக்கர மோட்டார் வாகன உற்பத்தியில் முன்னணியில் விளங்கும் யமஹா நிறுவனம் தற்போது 125 சிசி திறன் கொண்ட புதிய மோட்டார் சைக்கிளை சல்யூடோ என்ற பிராண்ட் பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக 125 சிசி திறனில் இது வெளிவந்துள்ளது. இந்தப் பிரிவில் எடை குறைந்த வாகனம் இதுவாகும். இதன் எடை 112 கிலோவாகும். இதனால் இதன் செயல் திறன் அதிகரிப்பதோடு பெட்ரோல் உபயோகம் குறையும். இந்த மோட்டார் சைக்கிளில் புளூ கோர் என்ஜின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது சோதனை ஓட்டத்தில் ஒரு லிட்டருக்கு 78 கி.மீ. தூரம் ஓடியதாம். சொகுசான பயணத்தை ஓட்டுபவருக்கும், பின்னால் பயணிப்பவருக்கும் அளிக்கும் வகையில் சிறந்த சஸ்பென்ஷன், ஃபுட் ரெஸ்ட் ஆகியவற்றுடன் இது வெளிவந்துள்ளது.

Sachin

Image
மாஸ்டர் பேட்ஸ்மேன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் இன்று 42-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். 16 மாதங்களுக்கு முன்பு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்றுவிட்டார் சச்சின். ஆனால் இன்றளவிலும் அவரை பற்றிய பேச்சுகளும், செய்திகளும் ஓய்ந்தபாடில்லை. இன்றளவிலும் கிரிக்கெட்டுடனான தொடர்பில் இருந்து வருகிறார். ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பெற்றுவிட்ட சச்சின், கால் நூற்றாண்டு காலம் தான் விளையாடிய கிரிக்கெட்டை பற்றிய அற்புதமான நுண்ணறிவு கொண்டவர். கிரிக்கெட் தொடர்பாக அவர் தெரிவித்து வரும் கருத்துகள் இன்றளவிலும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வருகின்றன. ‘பிளேயிங் இட் மை வே’ என்ற பெயரில் வெளியான சச்சினின் சுயசரிதை கடந்த நவம்பரில் வெளியாகி ஹிட் அடித்தது. சமீபத்தில் முடிவடைந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தூதராக சச்சின் இருந்தது குறிப்பிடத்தக்கது.

திருமண பொருத்தம்

Image
'ம னைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்', 'கணவன் அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம்' என்று சான்றோர்கள் சொல்லி வைத்துள்ளனர். ஆயிரம் காலத்துப் பயிர் எனப்படும் திருமண வாழ்வு சிறக்க முன்னோர்கள் சில வழிமுறைகளை கடைப்பிடித்தனர். பணப்பொருத்தம் பார்ப்பதை விட மனப்பொருத்தமும், மண் பொருத்தமும், மங்கல நாண் சூட நட்சத்திரப் பொருத்தமும் பார்க்க வேண்டும் என்று கண்டறிந்தனர். 'வாழ்பவனுக்கு நட்சத்திரம்' என்று கண்டறிந்தனர். 'நம்பிக்கையூட்டும் நட்சத்திரப் பொருத்தங்கள் வாயிலாக நாம் வரனைத் தேர்ந்தெடுக்கலாம். வரம் தரும் தெய்வம் 'வரன்' தரவேண்டுமானால் அதற்குரிய வழிபாடுகளையும் முன்னோர்கள் கண்டறிந்தனர். எனவே திருமணம் பேச முன்வரும் போது முதலில் நட்சத்திரப் பொருத்தம் நன்றாக இருக்கிறதா என்று பார்த்து ஜாதகம் வாங்குவதை முன்னிட்டு கீழ்கண்ட அட்டவணை வழங்கப்படுகிறது. அதன்பிறகு வரன்கள் ஜாதகத்தில் தசாபுத்தி சந்திப்பு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். ஏதேனும் தோஷங்கள் உள்ளதா என்று பார்க்க வேண்டும், செவ்வாய் தோஷம், சனி தோஷம், சர்ப்ப தோஷம் மற்றும் கிரக தோஷங்கள் இருக்கிறதா என்பதைப் பார்க்க வ

LEEK FOODBALL

Image
மேட்ரிட்,  ஆட்டத்தின் இறுதி நேரத்தில் இரண்டு நிமிடங்களுக்கு முன்னதாக கோல் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றுள்ளார் ரியல் மேட்ரிட் அணியின் வீரர் ஜேவியர் ஹெர்னான்டெஸ். நடப்பு சீசனில் இதற்கு முன்னதாக 7 முறை அட்லெட்டிகோவுடன் ரியல் மாட்ரிட் மோதியுள்ளது. ஆனால், எந்த போட்டியிலும் அந்த அணியை வீழ்த்த முடியவில்லை. இந்நிலையில், சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் 14 நிமிடங்களில் ஆட்டத்தை முடிக்க வேண்டிய கட்டாயம் இருந்த சூழ்நிலையில், எதிரணி வீரர் ஆர்டா டூரானுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதை சாகமாக பயன்படுத்திக் கொண்ட ஜேவியர் பந்தை லாவகமாக வெற்று வலைக்குள் ரொனால்டோவை தாண்டி செல்லும் அளவுக்கு கோலாக மாற்றினார். அந்த ஒரு கோல் ஆட்டத்தையே மாற்றி (1-0) அரையிறுதிக்குள் ரியல் மாட்ரிட் அணியை தகுதி பெறச் செய்துள்ளது. 

VIRAT KOLHI

Image
பெங்களூரு,  ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியில் பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த 20-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது. இதில் 182 ரன் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணியால் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்களே எடுக்க முடிந்தது. 62 ரன்கள் குவித்த சென்னை வீரர் சுரேஷ்ரெய்னா ஆட்டநாயகன் விருது பெற்றார். 5-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். பெங்களூரு அணி தொடர்ச்சியாக சந்தித்த 3-வது தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது.  தோல்விக்கு பின்னர் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில், ‘தோல்வி எங்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. உண்மையை சொல்லப்போனால் நாங்கள் ஒரு அணியாக ஒருங்கிணைந்து செயல்படுவதில் தவறி விட்டோம். இந்த குறையை போக்க நாங்கள் கலந்து ஆலோசிக்க வேண்டியது அவசியமாகும். இந்த பிரச்சினையை சரி செய்ய முடியும் என்று நம்புகிறோம். தனிப்பட்ட வீரரின் சிறப்பான ஆட்டத்தை விட நல்ல இணை (பார்ட்னர்ஷிப்) ஆட்டம் அமைய வேண்டியது முக்கியமானதாகும். அது தான்

SAINA

Image
வுஹான், ஆசிய பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனைகள் சாய்னா, சிந்து ஆகியோர் கால் இறுதிக்கு முன்னேறினார்கள். காஷ்யப் தோல்வி கண்டு வெளியேறினார்.  கால் இறுதியில் சாய்னா ஆசிய பேட்மிண்டன் சாம்பியன் ஷிப் போட்டி சீனாவின் வுஹான் நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், ஜப்பான் வீராங்கனை நோஜோமி ஒகுஹராவை சந்தித்தார்.  67 நிமிடங்கள் நீடித்த விறுவிறுப்பான இந்த மோதலில் சாய்னா நேவால் 21-14, 10-21, 21-10 என்ற செட் கணக்கில் நோஜோமியை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார். கால் இறுதியில் சாய்னா, சீன தைபேயின் சு யிங் தாய்யை எதிர்கொள்கிறார்.  சிந்து அபார வெற்றி மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் உலக போட்டியில் இரண்டு முறை வெண்கலப்பதக்கம் வென்றவரான இந்திய இளம் வீராங்கனை பி.வி.சிந்து 21-8, 21-9 என்ற நேர்செட்டில் மக்காவ் வீராங்கனை டெங் லோக் யுவை எளிதில் விரட்டியடித்து கால் இறுதிக்குள் நுழைந்தார். இந்த வெற்றியை பெற சிந்துவுக்கு 20 நிமிடமே தேவைப்பட்டது. சிந்து கால் இறுதியில் ஒலி