Posts

சினிமாவை விட்டு விலகும் பிரியா வாரியார்...?

Image
கண் சிமிட்டல் மூலம் பிரபலமான பிரியா வாரியர் நடிப்பில் வெளியான ‘ஒரு அடார் லவ்’ படம் எதிர்பார்த்த வெற்றி பெறாததால் தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. இதற்கிடையே அவர் நடித்த ‘ஸ்ரீதேவி பங்களா’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியை அவதூறு செய்வதுபோல் காட்சிகள் உள்ளது என்று அவரது கணவர் போனிகபூர் எதிர்த்து வருகிறார். இதனால் கடும் வருத்தத்திலும், கவலையிலும் இருக்கும் பிரியா வாரியர் சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

sandakozhi movie

Image
விஷால் பிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் லிங்குசாமி இயக்கத்தில்  விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராஜ்கிரண், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘சண்டகோழி2 ‘ 2005 வெளியாகி ஹிட்டடித்த ‘சண்டகோழி‘ படத்தின் இரண்டாம் பாகம். படித்துவிட்டு ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் ஊருக்கு வரும் பாலு(விஷால்), சுற்றுவட்டார ஊர்களுக்கெல்லாம் பெரிய ஐயாவாக துரை ஐயா(ராஜ் கிரண்). ஏழு வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு பிரச்னையால் ஊருக்குள் திருவிழா இல்லாமல் , மழை தண்ணி இல்லாமல் ஊரே காத்துகிடக்க. இந்த வருடமாவது நடத்தலாம் என திருவிழாவுக்கான திட்டம் போடுகிறார்கள் ஊர் பெரியவர்கள். ஆனால் பிரச்னைக்குக் காரணமான குடும்பமோ நீங்கள் என்ன சொன்னாலும் எங்கள் பழியைத் தீர்ப்போம் என வரிந்துகட்டிக்கொண்டு நிற்கிறது.  இதனால் எவ்வித பிரச்னையும் இல்லாமல் திருவிழாவை நடத்தி முடிக்க பாலுவும், துரை ஐயாவும் முடிவு செய்து களத்தில் இறங்குகிறார்கள். யாரை இவர்கள் பழி  தீர்க்க நினைக்கிறார்கள், ஏன், முடிவு என்ன என்பது மீதிக் கதை. முதல் பாகம் வந்து 13 வருடங்கள் கழித்து இந்த பாகம் வெளியானாலும் அத்தனை நடிகர்களையும் ஒன்றிண
Image
பெண்கள் தங்கள் மீது நடந்த பாலியல் துன்புறுத்தல் பற்றி மீடூ  இயக்கம் மூலமாக இணைய தளத்தில் வெளிப்படையாக பேசி வருகின்றனர். நடிகைகள் பலர் தாங்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப் பட்டதுபற்றி கூறிவருவதால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகை ரகுல் ப்ரீத் சிங் கூறியதாவது: பெண்கள் பாலியல் பலாத்காரம் அல்லது அவர்களை பாலியலுக்கு வற்புறுத்துதல் வேறு, பெண்களிடம் தவறாக நடப்பது வேறு, இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது என்கிறார்கள். இந்த பிரச்னையில் எது நடந்தது, எது நடக்கவில்லை என்பதை எப்படி பிரித்துப்பார்க்க முடியும். இதை கூர்ந்து கவனிக்க வேண்டும்.  பல ஆண்டுகளாக பெண்கள் இதுபோன்ற கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். அது நடக்க கூடாது. நிறைய சயம்பவங்கள் இதுபோல் நடப்பதால் அச்சம்பவங்கள் நீர்த்துபோகச் செய்யப்படுகின்றன. பெண்கள் தங்கள் குரலை வெளிப்படுத்த உதவியிருக்கும் சமூக வலைதளங்களுக்குத்தான் நன்றி கூற வேண்டும். இம்முறை இதுபோன்ற பிரச்னைகள் நீர்த்துப்போகச் செய்யாமல் நிச்சயம் ஏதாவது ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன். மீடூ பெரிய அளவில் பேசப்பட்டு ஒரு

செப்டம்பரில் அதிரடி காட்டவரும் ஜி.வி.பிரகாஷின் ‘புருஸ்லீ’

Image
<div id="google_translate_element"></div><script type="text/javascript"> function googleTranslateElementInit() {   new google.translate.TranslateElement({pageLanguage: 'en'}, 'google_translate_element'); } </script><script type="text/javascript" src="//translate.google.com/translate_a/element.js?cb=googleTranslateElementInit"></script>          ஜி. வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘புருஸ்லீ’. இப்படம் ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே கமிட்டாயிருந்தார் ஜி.வி.பிரகாஷ். அதன்பிறகு, அவர் நடிப்பில் வெளிவந்த அடுத்தடுத்த படங்கள் வெற்றியடைவே, பல படங்கள் அவரை தேடிவர ஆரம்பித்தன. இதனால், ‘புருஸ்லீ’ படம் திட்டமிட்ட நேரத்தில் முடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது ‘புருஸ்லீ’ படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்தில் ஜி.வி.க்கு ஜோடியாக கீர்த்தி கர்பந்தா நடித்துள்ளார்.  ஏற்கெனவே, ஜி.வி.பிரகாஷ்- கீர்த

புதிய படத்தில் அஜித் நடித்த காட்சிகள் இணையதளத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி

Image
அஜித்குமார், தனது புதிய படத்தில் நடித்த காட்சிகளை சிலர் திருட்டுத்தனமாக படம் பிடித்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதனால் படக் குழுவினர் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். நடிகர்களும், இயக்குனர்களும் தங்கள் புதிய படங்களின் கதை மற்றும் தோற்றங்களை ரகசியமாக வைத்து இருப்பது வழக்கம். அவைகள் வெளியானால் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு குறைந்து விடும் என்பது அவர்கள் கணிப்பு. ரஜினிகாந்தின் கபாலி படப்பிடிப்பு மலேசியாவில் நடந்தபோது திருட்டுத்தனமாக அதை படம்பிடித்து இணையதளங்களில் வெளியிட்டனர். இதனால் படம் வெளியாவதற்கு முன்பே ரஜினியின் தோற்றம் ரசிகர்களுக்கு தெரியவந்தது. அதன்பிறகு பலத்த பாதுகாப்புடன் படப்பிடிப்பை நடத்தினார்கள். ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் 2.0 படப்பிடிப்பையும் படக்குழுவினருக்கு அடையாள அட்டைகள் வழங்கி பாதுகாப்புடன் நடத்தி வருகிறார்கள். படப்பிடிப்பு அரங்குக்குள் செல்போன் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுபோல் சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பும் ஐரோப்பிய நாடுகளில் பாதுகாப்புடன் நடந்து வருகிறது. இது அஜி

ஜோக்கர் - விமர்சனம்

Image
அதிகார மையங்களை எளிய மனிதனால் எப்படி தட்டிக் கேட்க முடியும்? அதனால் தன்னையே ஜனாதிபதியாக கருதிக் கொள்ளும் மனநிலை படைத்தவராக மாறுகிறார். ஜோக்கராக பாவித்துக் கொண்டு மன்னர் மன்னன் எழுப்பும் கேள்விகள், ஒவ்வொன்றும் சம்மட்டி அடிகள்.  அரசியல்வாதிகளின் ஆர்ப்பாட்டம், அதிகாரிகளின் ெமத்தனம், மணல் கொள்ளை, கால் ஒடிந்த ஆட்டுக்கு நஷ்ட ஈடு, ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த குழந்தைக்கு நீதி கேட்பது என பல பிரச்னைகளை தொட்டுச் செல்கிறது படம். மன்னர் மன்னன் வைக்கும் கோரிக்கைகளும், கேள்விகளும் பதில் சொல்ல முடியாதவையாக இருக்கிறது. தன் மனைவியை கருணை கொலை செய்ய அனுமதி கோரும் மனுவை நிராகரித்த நீதிமன்றத்தின் முன், ‘கழிப்பறை கட்டித்தர வக்கில்லாத அரசிடம் கருணையை எதிர்பார்த்தது என் தவறுதான்’ என்று அவர் முழங்குவது உலுக்கி எடுக்கிறது.  மன்னர் மன்னனாக குரு சோம சுந்தரம் வாழ்ந்திருக்கிறார். ஒரு எளிய மனிதனின் காதலை நுணுக்கமாக வெளிப்படுத்துவது, தன்னை ஜனாதிபதியாக கருதிக்கொண்டு மிடுக்காக நடப்பது, அதிகாரத் தோரணையில் ஆணையிடுவது என இதுவரை இல்லாத புதிய கதாபாத்திரத்திற்கு தன் நடிப்பால் உயிர் கொடுத்திருக்கிறார்.  மன்னர் மன்னனின

மகளுக்காக வாய்ப்பு கேட்கும் தாய்க்குலம்!

Image
நீண்ட காலமாக முன்னணி நடிகையாக இருக்கும் மூன்றெழுத்து நம்பர் நடிகைக்கு தற்போது பட வாய்ப்புக்கள் குறைந்து வருகிறதாம். அதிக சம்பளம் கேட்பதால் நடிகைக்கு இந்த நிலைமை வந்திருக்கிறதாம். இதனால், நடிகையின் தாயார் சம்பளம் ஒரு பிரச்சினை அல்ல. அதை குறைத்துக் கொள்ளலாம்...’’ என்று இறங்கி வந்து இருக்கிறாராம். மகளுக்கு பட வாய்ப்புகள் குறைந்து போனதில், அவருக்கு பெரும் கவலை. அதனால், கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கி, மகளுக்காக வாய்ப்பு கேட்கிறாராம், தாய்க்குலம்!