kuzhanthai valarpu

நாம் பலரும் நினைப்பது போல் குழந்தை வளர்ப்பு என்பது குழந்தைக்கு நேரம் தவறாமல் பால் கொடுப்பது, குழந்தைக்கு நோய் வராமல் பார்த்துக் கொள்வது மட்டுமே அல்ல. இதையும் தாண்டி இன்னும் பல. மேலே சொன்ன நேரம் தவறாமல் பால் கொடுப்பது, குழந்தையின் அழுகையரிந்து மருத்துவரின் உதவியை நாடுவது என்பது போன்ற செயல்களை நாம் தான் (ஒரு தாய் தான்) செய்ய வேண்டும் என்பது அல்ல. தாய் ஸ்தானத்திலிருந்து குழந்தையின் பாட்டியோ அல்லது வேலைக்கார பெண்ணோ கூட செய்யலாம். ஆனால் குழந்தை வளர்ப்பு என்பது குழந்தையின் அறிவைத் தூண்டுவது, குழந்தையின் நன்னடத்தைக்கு வழி வகுப்பது, குழந்தையின் தன்னபிக்கையை வளர்ப்பது என்பது போன்று பல விழயங்கள் அடங்கியவை.

குழந்தை வளர்ப்பு என்பது நாம் நினைப்பது போல் குழந்தை பிறந்தவுடன் தொடங்குவது அல்ல அது குழந்தை கருவுட்ரதில் இருந்து ஆரம்பிக்கப் படுகிறது. மருத்துவரின் பரிந்துரைப்படி நாம் நேரம் தவறாமல் உணவு உண்பது முதல் தேவைப்படின் சத்து மாத்திரைகள் எடுத்துக்கொள்வது தொடங்கி அனைத்தும் இதில் அடக்கம்.

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு தவம். அதை நாம் சரியாக செய்தால் நம் சந்ததியினர் நலமாக இருப்பர். இதில் நம்மை விட நம் மூதாதையர்கள் மிகவும் கெட்டிக்காரர்கள். இதற்கு ஒரு உதாரணம் நம்முடைய மகாபாரத கதையில் சொல்லப்பட்டிருக்கு. நாம் இன்றைக்கு அறிவியல் பூர்வமாக பல ஆராய்சிகள் மூலம் குழந்தையின் மூளை வளர்ச்சி என்பது கருவுட்ட்ற ஏழு மாதம் தொடங்கி ஆரம்பிக்கிறது. ஆகவே குழந்தை நாம் பேசுவது அனைத்தையும் கருவில் 7 மாதமாக உள்ள காலம் தொட்டே கவனிக்கின்றது. நாம் குழந்தை கருவுற்ற 7 மாதம் தொடங்கி நல்லவற்றையே பேச வேண்டும். நல்ல சுற்றுப்புற சூழலை உருவாக்கித்தர வேண்டும். தாய் நல்லவற்றையே சிந்திக்க வேண்டும் என்றெல்லாம் ஆராய்ந்து நடைமுறை படுத்த விரும்புகிறோம்.

ஆனால் அன்றைக்கே நம்முடைய இதிகாசமான மகாபாரதத்தில் இதற்கான சாட்சி உண்டு. கிருஷ்ணன் தன்னுடைய தமக்கையான (தங்கை)சுபத்திரை (அர்ஜுனனின் மனைவி) நிறைமாத கர்பிணியாக இருக்கும் காலத்தில் அவளுக்கு சில போர் வியூக முறைகளைப் பற்றிக் கதை  கதையாக சொல்லிகொண்டுவந்தார்.அதில் முக்கியமானது சக்கரவியூகம். சக்கரவியூகம் என்பது அன்றைய காலகட்டத்தில் எதிரிகளை தோற்கடிக்க பயன்படுத்தப்பட்ட மிக முகஈயமான படை அமைப்பு. இதை அறிந்தவர்கள் வெகு சிலரே. கிருஷ்ணன் சக்கரவியூகம் என்பது என்ன? அதன்படி படைகளை எவ்வாறு நிறுத்த வேண்டும், எதிரிகளை எப்படி சுற்றி வளைக்க வேண்டும், எதிரி இது மாதிரி வியூகம் அமைத்தால் எப்படி அவர்களை எதிர்கொண்டு வியூகத்தில் நுழைந்து எதிரிகளை தாக்குவது என்பது போன்று சொல்லிகொண்டிருக்கும் சமையத்தில் அங்கு வந்த அர்ஜுனன் சுபத்திரை உறங்கி விட்டதை சுட்டிக்காட்டி கிருஷ்ணனை அங்கிருந்து அழைத்துச் சென்றுவிட்டான். இதுவரை கிருஷ்ணன் சொன்ன கதையை கேட்டுகொண்டிருந்த குழந்தைக்கு எதிரியின் சக்கர வியூகத்திற்குள் நுழைந்த பின்னர் அதிலிருந்து எப்படி வெளிவருவது என்று அறிந்துகொள்ளும் வாய்ப்பு இல்லாமல் போனது. அந்தக் குழந்தை தான் பின்னாளில் அபிமன்யு என்ற பெயருடன் மகாபாரதப் போரில் எதிரிகளால் சக்ரவியூகத்தின் மத்தியில் மாடி இறந்துபோன வீரன். அபிமன்யு வளரும் காலத்திலும் சக்ரவியூகம் பற்றி அறியும் வாய்ப்பு அவனுக்கு இல்லாமல் போனது.

பாண்டவர் தரப்பில் இந்த சக்கர வியூகம் பற்றி அறிந்தவர் கிருஷ்ணனும், அர்ஜுனனும் தான் என்பதை அறிந்த கௌரவர்கள் அவர்கள் போரிட வேறு இடம் சென்ற அன்று இந்த வியூகத்தை அமைத்து பாண்டவர்களை எதிர்த்தனர். இந்த வியூகத்தை எப்படி உடைப்பது எதிரிகளை எப்படி தாக்குவது என்று அறியாத பாண்டவர்கள் திணறியபோது சிறுவனாக இருந்த போதும் அபிமன்யு அதற்குள் எப்படி உள்ள செல்வது என்பது தனக்கு தேயும் என்றும் ஆனால் தனக்கு அதிலிருந்து வெளிவர தெரியாது என்பதால் எக்காரணத்தை  கொண்டும் தன்னை பின்தொடர்வதை தவிர்க்க கூடாது என்று பண்டவர்களிடம் சொல்லி புறப்பட்டான்.வேறு வழி இல்லாத பாண்டவர்களும் சம்மதித்து அவனை பின் தொடந்தனர். இதை சற்றும் எதிர்பாராத கௌரவர்கள் பாண்டவர்களை தோற்கடிக்க சூழ்ச்சி செய்து அபிமன்யுவை பாண்டவர் படைகளிடம் இருந்து பிரித்து சூழ்ந்துகொண்டனர். நிராயுதபாணியாக(ஆயுதம் ஏதும் இன்றி) நின்ற அபிமன்யுவுக்கு போர் நெறிமுறைகளை மீறி கௌரவர்கள் கொன்றனர். இது மகாபாரத கதை.

நம்முடைய இதிகாசத்திலேயே தாயின் வயிற்றில் இருந்த 9 மாத  குழந்தை தன் காதால் கேட்ட கதையை  வைத்து பின்னாளில் போர் புரிந்ததாக சொல்லப்பட்டிருகிறது. இதையே தான் இன்று நம் ஆராய்ச்சியாளர்களும் கூறி வருகின்றனர். இதனை முனிட்டே 7 வயதுக்கு மேல் கர்பிணிப் பெண்ணின் முன்னாள் சண்டையிடுவது, தகாத வார்த்தைகள் பேசுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூட அறிவுரைகின்றனர். அதனால் தான் நான் நம்முடைய மூதாதையர்கள் குழந்தை வளர்ப்பில் மிகவும் கெட்டிக்காரர்கள் என்று கூறினேன். நம்முடைய சென்ற தலைமுறையினர் கூட குழந்தைகளுக்கு பற்பல கதைகள் மூலம் குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்கள், குணங்களை வளர்த்து வந்தனர். 

ஆனால் இன்றைய காலகட்டத்தில் தனிகுடித்தனங்கள் அதிகரித்ததாலும், பெண்களும் அநேகர் வேலைக்கு செல்வதனாலும், இது மாதிரி கதைகள் கூறி குழந்தைகளை நம்மால் வளர்க்க முடியவில்லை. மேலும் இன்றைய குழந்தைகள் மிகவும் புத்திசாலிகளாக உள்ளனர். அவர்களை மேலும் அறிவாளிகளாக்க வேண்டியது(கத்தியை கூர்மையாக்குவது போல) நம்முடைய கடமை.

இவற்றைஎல்லாம் கருத்தில் கொண்டு இந்த வலை பின்னலை உருவாக்கி உள்ளோம். தாங்கள் பயன்படுத்தி பயன் அடைவதோடு தெரிந்தவர்கள், நண்பர்கள் அனைவருக்கும் கூறி எங்களின் முயற்ச்சிக்கு உதவுங்கள்.

Comments