Posts
Bagugali
- Get link
- X
- Other Apps
மே 31ம் தேதி நடைபெற இருந்த 'பாஹூபலி' படத்தின் இசை வெளியீட்டு விழா ஒத்திவைக்கப்பட்டதற்கு இயக்குநர் ராஜமெளலி விளக்கம் அளித்துள்ளார். இயக்குநர் ராஜமெளலியின் அடுத்த திரைப்படம் 'பாஹூபலி (தமிழில் மகாபலி)'. வரலாற்றுப் படமாக உருவாகி வரும் 'பாஹூபலி'யில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மே 31ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களுக்காக தற்போது அந்த விழா ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. 'பாஹூபலி' இசை வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டது ஏன் என இயக்குநர் ராஜமெளலி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்திருக்கிறார்கள். அதில் அவர் கூறியிருப்பது: "நீங்கள் அனைவரும் அறிந்தது போல், இம்மாதம் 31-ம் தேதி படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோவை வெளியிடுவதே முதற்கட்ட திட்டமாக இருந்தது. மேலும் செய்தியாளர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்து படத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றி அனைவருக்கும் தெரிவிக்கவே முதலில் ஏற்பாடு செய்திருந்தோம்.துர
Modi
- Get link
- X
- Other Apps
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி அரையிறுதியில் தோல்வியுற்றதை ரசிகர்கள் விமர்சித்த விதம் தன்னை வருத்தத்தில் ஆழ்த்தியதாக பிரதமர் மோடி கூறினார். அகில இந்திய வானோலியில் ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பான பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி நிகழ்த்திய உரையில் இது குறித்து அவர் பேசியது: "ஒரு மகிழ்ச்சி தரும் செய்தியையும், வருத்தமளிக்கும் வேறு ஒரு தகவலையும் நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்தியாவின் இரண்டு பெண்கள் நாட்டுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள் என்பது எனக்கு பெருமிதம் அளிக்கிறது. ஒரு பெண் சைனா நெஹ்வால் பாட்மிண்டன் விளையாட்டில் உலகிலேயே முதலிடம் பெற்றார், இரண்டாவது பெண், சானியா மிர்ஸா டென்னிஸ் இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் நிலையை அடைந்தார். இருவருக்கும் வாழ்த்துக்கள். நாட்டின் அனைத்து பெண்களுக்கும் வாழ்த்துக்கள். நம்மவர்களின் சாகசத்தையும் சாதனையையும் நினைக்கும் போது பெருமிதம் பொங்குகிறது. ஆனால் சில வேளைகளில் நாமுமே கூட கோபத்துக்கு உள்ளாக நேரிடுகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட்டின் அரையிறுதி ஆட்டத்தில் நாம் ஆஸ்திரேலியாவிடம் தோற்க்க நேர்ந்தது. சி